கோகுலத்தில் குதூகுலம்!
தேவரின் கடவுள் ,அசுரரின் காலன்!லட்சுமியின் நேசன்,பாற்கடலின் வாசன்!
அவன் திரு நாமம் சொல்ல ஆயிரமாயிரம் காலம் தவம் செய்திடவேண்டுமென
வானவரும்,ஞானியரும் பாற்கடலின் வாசலிலே ,பேட்டி காண காத்திருக்க,
முன்னம் அயோத்தி மக்கள் செய்த தவ புண்ணியமாய் ராமவதாரம் தந்தவன்!
இன்று கோகுலத்து மாந்தர் தம் துயர் களைய கிருஷ்ணாவதாரம் கொண்டான்!
ஆயர்குலம் என்ன தவம் செய்ததுவோ,பரந்தாமன் இவ்விடத்தில் வந்திடவே!
கோகுலத்து கோபி ஒருத்தி, தெருவெல்லாம் ஓடோடி சொன்ன செய்தி இதுதானே!
நந்தர் தம் மாளிகையில் ,நந்தராணி யசோதை,பெற்றெடுத்தாள் ஆண் மகவை!
அவன் பொன்னழகை பார்பதற்கு நம் கண்ணிரண்டு போதாதே !
அவன் மின்னும் கண்கள் விட்டு நம்மை மீட்டெடுக்க முடியாதே!
சுருண்ட கரும் கேசமது ,முகத்தில் வழியும் அழகுதனை கண்டு பிறவி பயண்,பெற்றிடவே,ஓடோடி வாரீர் !எம்குல கோபியரே!
கண்ணன் பிறந்த நற் செய்தி ,காட்டு தீ என கோகுலம் முழுதும் பரவியதே.
கோபர்களும் கோபியரும், கூடியதால், நிறைந்தது நந்தர் இல்லமதே!
ஒருவர் உள் செல்ல ,கண்டுவிட்ட மற்றொருவர் மகிழ்வுடன் வெளி செல்ல,
கண்டு வந்தவரின் வாழ்ததனை,தக்க முறையில் பெற்று கொண்டு,
வந்தவரை உபசரிக்க,பாலும் தயிரும்,பானகமும்,நீர் மோரும் என,
வேண்டியவர்,வேண்டியபடி ,விதவிதமாய் மகிழ்வுடனே உபசரித்து,
நடு,நடுவே தன் மகன் முகம் கண்டு ,பம்பரமாய் சுழலுகிறார் நந்த ராஜன்,
களைப்பு சிறுதும் முகம்தனிலே இல்லாமல் தாய்மையுடன் நந்தராணி!
கோபிகைகள் புடைசூழ,யசோதையவள் வீற்றிருக்க,தாயவளின் மடிதனிலே ஒய்யாரமாய் நந்தன் மகன்,பார் போற்றும் பரந்தாமன்,பச்சிளம் பாலகனாய் !
தாயன்பு என்பதிலே சுகம் கண்ட நாராயணன் மாற்றுமுறை எடுத்தான் நரனாய்!
சுற்றி நின்ற கோபியர்கள் திருமகளின் நாயகனை சிறப்புடனே அலங்கரித்தனரே!
ஒரு கோபி நெற்றியிலே செந்திலகமிட,மற்றொருத்தி கண் அதனில் அஞ்சனமிட,
கைதனிலே வளையலும்,பட்டு வங்கி குஞ்சலமுடன் இட.பாதகமலத்தில் தண்டை இட இடையினிலே அரைஞான் கொடியிட, பட்டு சொக்காய் மஞ்சள் வண்ணத்தில் மின்னிட
சிரம்தனில் முத்தும்,ரத்தினமும்,வைரமும் கோர்க்க பெற்ற வண்ண தலை பாகை இட
துஷ்டர் கண் தன மகனை தீண்டாமல் அன்னை யசோதை திருஷ்டி பொட்டு இட
பூரண அலங்கார பூசனமாய்,பாலகிருஷ்ணன் முகம் கண்ட பின்னே, மெய் மறந்து
கிழவர் முதல்,சிறுவர் வரை நின்ற நிலைதனை வர்த்தைதனில் வடிக்க இயலுமோ.
கிருஷ்ண பக்த சிரோன்மணிகள் மகாகவிகள் எழுத்து வரி கொடுக்க தவிக்கையிலே
அதை மானசீகமாய் கண்டு மகிழ்திடவே உம்மிடமே விட்டு விட்டேன் முயன்றுடுவீர்!

No comments:
Post a Comment