கவிதை வழி மட்டும் இன்றி வண்ணப்படம் வாயிலாகவும் கதை தொடர்கிறது!
மாயகண்ணன் பிறந்தான்
அழகிய மதுரா நகரினிலே,அதிசய சிறை கூடத்திலே!
கம்சன் அவன்,சூதில் தப்பி,தேவகி-வசுதேவர் துயர் துடைக்க,
பெற்றவர் சுயநினைவை நீக்கி,வாயில் காப்பான் மயக்கமுற,
மந்திர வித்தை பல காட்டி ,தாய்மாமன் அவன் கதை முடிக்க,
பிறப்பிலேயே விந்தையாய்,அழாத குழந்தையாய்
பேசும் அதிசயமாய்,மாயன் அவன் மண் புகுந்தான்!
குட்டி கண்ணன் பயணம்.
மாயன் அவன் ,தேவகியின் மணிவயிறு வாய்த்தவன்,
யாரும் அறியா பொழுதினிலே,மண்ணுலகம் வந்துவிட்டான்.
பிறந்த குழந்தை பேசுமோ?,பேசுமே!அது பரந்தாமன் என்பதனால்.
யாரவன்? மாயவன்,போகும் வழி தானே சொன்னான் தகப்பனிடம்.
என்னை,இவ்விடம் விடுத்து ,கோகுலம் சென்று சேரும்-என!
வசுதேவர் தலையில் சுமக்க,சிறை கதவு தானாய் திறக்க,
வாணம் மழையை கொட்ட,ஆதிசேசன் குடை பிடிக்க,
யமுனை நதி பாதை தர,கண்ணனவன் பயணம் செய்தான்.
கோகுலத்தில் ,நந்தரின் இல்லம் ...
நடு இரவினிலே,மாயா தேவி ,யசோதை தன் கர்பம் விட்டு வந்தாள்,
வசுதேவர் தான் சுமந்து வந்த குழந்தையை யசோதை அருகில் இட்டு,
மாயாதேவியை மாற்றி விட்டார்,வந்த வழி திரும்பி சென்றார்.யாரேனும் அறிவாரோ மாயவனின் மாயத்தை ?
No comments:
Post a Comment