யசோதையின் தாலாட்டு.
ஆயர் பாடி மாளிகையில் மாயவனை துயில செய்ய தொட்டிலிலே இட்டு,
அவன் மலர்முகத்தில் கண் பதித்து தாய்மை பொங்க முத்தமிட்டு,அள்ளி
அணைக்கின்றாள் ஒரு பொழுது,கொஞ்சி குலவுகிறாள் மறுபொழுது !
கொஞ்சுமொழி வார்த்தைகளால்,மெல்லிய குரலெடுத்து முனுமுனுத்தாள்
தாலாட்டு பாடலிலே நித்திரையை அழைகின்றாள்அன்பான யசோதை!
நித்திரா தேவி நீ ,தச்சனமும் நில்லாமல் இப்பொழுதே வந்திடுவாய்.,
என்மகவுதனை ஆரத்தழுவி நீ உன் வசமே பத்திரமாய் வைத்திடுவாய்
அவன் கனவதனில் இனிமைதனை சேர்த்து இன்பமதை தந்திடுவாய்.
ஆயிரம் கோப,கோபியர் அவனை ஆரத்தழுவ ஆர்வமுடன் தவமிருக்க,
அவனருகே செல்வதற்கு நான் ரகசியமாய் உனை அனுமதிப்பேன்
நித்திரை பெண்ணே நீ வேறெங்கும் செல்லாமல் என் அகம் வந்துவிடு
என் செல்ல கண்ணையன் உன்னை ஆசையுடன் அழைக்கின்றான்
தாமதம் இன்றி நீ தாவி அவனிடம் வந்துவிடு ,என அன்னையவள்
ஆசையுடன் தாலாட்ட,தன லீலை தனை காட்ட தக்க தருணமிது என்று
தன் இமை மூடி,அதரங்கள் சப்புக் கொட்டி பாவனை காட்டிட்டான் கண்ணையன்
அன்னையின் அவள் தன் அழைப்பின் பேரில் நித்திரையும் வந்திட்டால்
கண்ணனிடம் தான் மயங்கி அவள் ,அவனிடமே சரணடைந்திட்டால் என
கண்ணன் ,அவன் உறங்க கண்டு,யசோதை தன் தாலாட்டை நிறுத்தி,அருகே
உள்ளவரை அமைதி காக்க சைகை செய்து ,அனைவரையும் அனுப்பிவிட்டு,
வெளிச்சம் தனை மறைத்து விட்டு,பட்டு துகில் கொண்டு போர்த்திவிட்டு
தன் மகன் எழுவதற்குள் மற்ற வேலை முடிக்க செல்ல யசோதைமுனைகையிலே,
செல்ல சினுங்கள்,சில செய்து,தனகத்தே அழைத்து கொண்டான் மாயக்கண்ணன்
இதுபோலே,உறங்குவதும்,விழிப்பதுமாய்,மாதவன் விளையாடி ,தாய்மையிலே
உறவாடி,வையகத்தில் இவள் போலே என தாய்மைக்கு ஓர் பெயர் வழங்கி, யசோதை
செய்த பாக்கியம் என்னவென்று பாரில் உள்ளோர் வியக்க வைத்தான் பரந்தாமன்!

No comments:
Post a Comment