கவிதையில் கதைகள் என்ற இந்த புதிய பகுதியில் என்னுடைய பதிவுகளை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
இதில் முதலில் கண்ணன் கதைகளை கவிதையாக [நான் கவிதை என்று எண்ணியதை ] indusladies பதிவு செய்ததை மீண்டும் தொகுத்து இங்கே தருகிறேன்.
இந்த பாடல்கள் உண்மையில் -ஹிந்தி பக்தி இலக்கியத்தின் மஹா கவி சூர்தாஸ் அவர்களின் "சூர் சாகர் சடிக் "என்பதின் மொழி மாற்றம் .அவருடைய கவிதைகளை படிக்கும் போது ,மற்றட்ட மகிழ்ச்சியில்,உணர்வு மிகுதியில் ,பரவசமான ஒரு மனநிலையை அனுபவித்து உள்ளேன்.அதனை அனைவருடனும் பகிரவே இந்த முயற்சி.
கண்ணனின் குறும்புகளை ,சூர்தாஸ் வர்ணிக்கும் போது ,நாமே அந்த யசோதா மையாவாய் மாறி அனுபவிப்போம்.அதனை என் சிற்றறிவிற்கு [தமிழ் புலமையிலும் மற்றும் கணினி உபயோகத்திலும் ] எட்டிய வகையில் இங்கு தருகிறேன்.தவறுகள் இருப்பினும்,ரசம் குறைந்திருப்பினும் ,அதனை மறந்து [வேறுவழியும் இல்லை உங்களுக்கு] இதனை வாசிக்க அன்புடன் அழைக்கிறேன்.
முதலில் கண்ணன் வருகிறான் இங்கே.....
கிருஷ்ண லீலா-1
கண்ணன் வந்தான் ,எங்கள் கண்ணன் வந்தான் !
மதுரா நகரில் ,பிறப்பெடுக்க கண்ணன் வந்தான்!
தேவாதி தேவர்,முனிவர் மகிழ கண்ணன் வந்தான்!
கந்தர்வர் பூமாரி பொழிய , கண்ணன் வந்தான்!
வண்டுகள் ரீங்காரமிட,கண்ணன் வந்தான்
மானிடர் மகிழ்வுறவே,கண்ணன் வந்தான்!
அரக்கர் தனை அழித்திடவே ,கண்ணன் வந்தான்!
தேவகி துயர் துடைக்க கண்ணன் வந்தான்!
யசோதை கொஞ்சி மகிழ கண்ணன் வந்தான்!
அனைத்துலகும் வாழ்விக்க கண்ணன் வந்தான்!
கண்ணன் வந்தான் ,எங்கள் கண்ணன் வந்தான் !
Mam its so nice
ReplyDelete