கிருஷ்ண லீலா-9
யசோதையின் ஏக்கம்.
அசுரர்களை,அரை நொடியில் சம்ஹாரம் செய்யும் அனந்த மூர்த்தி அவன்
மூர்த்தி சிறிதாய் இருக்கும் போதே ,கீர்த்தி பல பெற்ற பெருமாள் அவன்
இத்தனை சிறப்பினையும் வாய்க்கபெற்ற தன் மகனை அறியாத அன்னையவள்
தனது அன்பு மகன் பெரியவனாய் வளர்வது எந்நாளோ என ஏங்குகின்றாள்!
பக்கத்திலே திருமகள் வீற்றிருக்க பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன்
இடையவரின் இல்லத்திலே நாற்கால் தொட்டிலில் சத்தை சயனித்திருக்க
முட்டி மண்ணில்பட கரங்கள் தரையில் ஊன்ற,நாலுகால் பாய்ச்சலாக தன்
மகவு நந்தர் இல்லமதில் தவழ்ந்து வரும் அழகை காண ஆவலுற்றால்.
மூவுலகும் பாதத்தால் அளக்க மூன்றாம் பாதம் மகாபலி தலையில்வைத்தான்,
வாமன மூர்த்தி அவன் தத்தி,தத்தி நடக்கும் நடை காண ஏக்கம் கொண்டாள்
உபதேசம் உதிர்த்த பவளவாய் அச்சுதன் அமரர் தொழும் லட்சுமியின் நேசன்.
திருவாய்கொஞ்சு மழலை மொழியால் அம்மா என அழைக்க தவமிருந்தால்.
அற்புதம் ஆயிரம் செய்யும் நெடிந்துயர்ந்த பெருமாள் என பெயர் பெற்றவன்
கை கால் உதைத்து ,அழுதுப் புரண்டு அண்டம் நடுங்க அடம் செய்வானோ
அனைவர்க்கும் அனுதினமும் படியளக்கும் வைகுண்ட வாசவன் அவன் தன்
நீல வண்ண பிஞ்சு கையால்,சிந்தி சிதறி ,அன்னம் அள்ளி அள்ளி உண்பானோ
என தன் உயிரெனவே போற்றி வளர்க்கும் தன மகனை சிந்தையில் நிறுத்தி
யாவையுமே கற்பனையில் கண் குளிர கண்டு இன்புற்றாள் அன்னை யசோதை
அவள் தன் அகத்தில் கண்ட காட்சி தன அகம் தனில் அரங்கேறும் நாளும் வந்தது
என்ன தவம் செய்தனை யசோதை மையா என தேவரும் முனிவரும் போற்றினர்.
மூன்று மாதம் முடியும் முன்னே உடல் தூக்கி குப்புற விழுந்தான் கண்ணன்
இதை கண்டு,தேங்காய் தலை சுற்றி திருஷ்டி கழித்து உடைத்தால் அன்னை.
வயிறு அமுங்கி வாய் மூக்கு தரையில் பட்டு அடிபடவே அழுதான் கண்ணன்
தான் கற்ற முதல் வித்தை தனை விடாமல் பலமுறை முயன்றான் வண்ணன்
எத்தனை முறை விழுந்த போதும் சலிக்காமல் பூ போல திருப்பி விட்டால்அன்னை.
கண்ணன் அமுதுன்னல்
ஆவணி அஷ்டமியில் அவன் பிறப்பு,ஆறுமாதம் கழிந்தது ஆயர்பாடி வந்தடைந்து.
இன்று தன் குழந்தைக்கு முதல் அன்னமிட குருவாயூர் சன்னதி அனைவரும் நாட.
அன்று அன்னை பரந்தமனுக்கே அன்னமிடஅனைவரையும்அழைத்திட்டாள் அன்னம்
ஒருவாய் அவனுள்ளே சென்று அடைக்கலம் புக அவனி அடைந்தது நிறைவு!
அன்புசார் கோபரும் கோபியரும் நந்தரில்லம் வந்தனர்
கண்ணன் அவன் பசியாற தன் மனம் நெகிழ்ந்தனர்.
ஆனந்தமாய் ஆட்டம் ஆடி வாழ்த்து பாடி மகிந்தனர்
நந்த மைந்தன் சுந்தர முகம் கண்டு கழித்தனர்!

கண்ணன் வளர்தல்
குப்புற விழுதல் மூன்று மாதம் முடியும் முன்னே உடல் தூக்கி குப்புற விழுந்தான் கண்ணன்
இதை கண்டு,தேங்காய் தலை சுற்றி திருஷ்டி கழித்து உடைத்தால் அன்னை.
வயிறு அமுங்கி வாய் மூக்கு தரையில் பட்டு அடிபடவே அழுதான் கண்ணன்
தான் கற்ற முதல் வித்தை தனை விடாமல் பலமுறை முயன்றான் வண்ணன்
எத்தனை முறை விழுந்த போதும் சலிக்காமல் பூ போல திருப்பி விட்டால்அன்னை.
ஆவணி அஷ்டமியில் அவன் பிறப்பு,ஆறுமாதம் கழிந்தது ஆயர்பாடி வந்தடைந்து.
இன்று தன் குழந்தைக்கு முதல் அன்னமிட குருவாயூர் சன்னதி அனைவரும் நாட.
அன்று அன்னை பரந்தமனுக்கே அன்னமிடஅனைவரையும்அழைத்திட்டாள் அன்னம்
ஒருவாய் அவனுள்ளே சென்று அடைக்கலம் புக அவனி அடைந்தது நிறைவு!
அன்புசார் கோபரும் கோபியரும் நந்தரில்லம் வந்தனர்
கண்ணன் அவன் பசியாற தன் மனம் நெகிழ்ந்தனர்.
ஆனந்தமாய் ஆட்டம் ஆடி வாழ்த்து பாடி மகிந்தனர்
நந்த மைந்தன் சுந்தர முகம் கண்டு கழித்தனர்!

No comments:
Post a Comment