கிருஷ்ண லீலா-10
கண்ணன் தவழ்தல்;
முகுந்தன் முன்னங்கால் மண்ணில் பட கைகளை கூட்டி தவழ்கின்றான்
நந்தர் தம் மாளிகையில் செம்பொன் தூண்கள் சூழ் நடு முற்றத்தில்
கைகளை முன்னால் வைத்து,கால்களை அதனுடன் கூட்டி தவழ்கின்றான்
அவன் அசையும் பொழுதினிலே இடைதனை அலங்கரித்த மேகலை ஒலி எழுப்ப
தான் நகரும் அழகினை தானே தூணில் கண்டு குதூகல குரல் எழுப்பினான்
மற்றொருவன் துணையாய் விளையாட கிடைத்தான் என்று களித்திட்டான்
எதிர் தவழ்ந்த ,தன் பிம்பம் நோக்கி,பால் பற்கள் தெரிய நகைத்தான்.
தன் மகன், செய்கை கண்டு மனம் மகிழ்ந்த அன்னை புன்னகை பூத்தாள்.
பரம்பொருளே,தரையினில் தவழ்ந்திட பூமித் தாயும் சிலிர்த்தாள்

உலகம் காட்டல்
தவழ்ந்த கண்ணன் ,தவழ்ந்த படி, படி தாண்டி வீதியில் இறங்கிட்டான்
தாய் காண பொழுதினிலே பிடி மண்ணை தன் செம்பவள வாயில் இட்டான்.
தாயவள் தன் மகனின் வாய் நிறைத்த மண் துகளை கண்டு விட்டால்
கம்பெடுத்து,வேகமாய் விரைந்து வந்து ,தன் மகனை அதட்டி கேட்டாள்
ஆவென காட்டு,மண் அள்ளி வாயில் போட்டது உண்மைதானே என்று,
தாயிடம்,ஏதும் அறியா பாலகனாய் பொக்கை வாய் திறந்துக் காட்ட,
அதனுள்ளே ஈறேழு உலகும் தெரிய,தாயும்,மகனும் சேர்ந்து தெரிய,
தலை சுற்றி,கண்மூடி ,நாவரண்டு மூர்சையுற்றால் நந்தன் ராணி.
நடை பயிலுதல்.
அன்னையவள் யசோதை,தன் கண்மணிக்கு நடை பயிற்றுவித்தால் .
மூன்று உலகினையும் தன் மூன்றே அடிகளினால் அளந்தவன் அவன்
மகாபலியின் சிரசினிலே தன் பாதம் வைத்து பாதாளம் அனுப்பியவன்.
இன்று,அன்னையவள் கைபிடித்து ஒரு ஒரு அடியாக நடை பயின்றான்.
வைக்கும் அடி தடுமாறி,கீழே விழுந்திடுவனோ, புண்படுவனோ,என பரிதவித்து கண்ணன் அவன் கைபிடித்து நடத்துகிறாள் மெல்ல மெல்ல பயிற்றுவித்தாள்
யசோதை ,தத்தி தத்தி நடந்த மகன் நேர்நடை நடக்க கண்டு மகிழ்ச்சியுற்றாள் .
தான் கண்ட காட்சியினை,தன் மனாளனுக்கும்,மற்றவருக்கும் காட்டுகிறாள்.
தன் மூத்த மகன் பலராமனை அழைத்து, தம்பியுடன் விளையாட பணிக்கின்றால்.
தயங்கி,தயங்கி நடை பயின்ற கண்ணன் முற்றம் வரை சென்று விட்டு திரும்புகிறான் .
நிலை படியை தாண்ட ,முயன்று கீழே விழுந்து எழுந்தான் மூஉலகம் அளந்த பெருமாள்.
தன் மகனின் முயற்சியினை கண்ணுற்ற தாயவள் ,கைபிடித்து படியிறங்க படிப்பித்தால் .
யசோதையுடன் கண்ணின் விளையாட்டை கண்டு மகிழ்ந்தது அந்த வானுலகம்
என்ன தவம் செய்தனையோ யசோதை என வியப்புற்றார் அமருலகின் தேவர்
அவள் பெற்ற வரத்தினை மெச்சி மெய்சிலிர்த்தனர் மெய் ஞான முனிவர்
இவை ஏதும் அறியாத அன்னையவள் மகன் மேல் கண் பதித்து காத்து நின்றால்.

No comments:
Post a Comment